எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பில் இருந்து கொழும்புக்கு நாளை (08) காலை 6.10 மணிக்கு ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக, மட்டக்களப்பு ரயில் நிலைய அதிபர் ஏ.யூ.என்.நுவைஸ் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் ரயில் சேவை நாடாளவிய ரீதியில் இடைநிறுத்தப்பட்ட நிலையில், நாளை முதல் மீண்டும் சேவை ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக, நிலைய அதிபர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சில ரயில்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து ரயில்களும் நேர அட்டவணைக்கு அமைவாக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் வி.ஏ.சி பொல்வத்தகே தெரிவித்தார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.