பறவைகளால் நடப்படும் மரங்கள் 

தாவரங்களின் விதைகளை பரப்பி புதிய தாவரங்களை முலைக்கச் செய்வதில் பறவைகளின் பங்கு மிகப்பெரியது. பறவைகள் பழங்களை சாப்பிட்ட பிறகு அவற்றின் எச்சங்கள் வேறு இடங்களில் விடப்படும் போது அவை உரங்களால் முடப்பட்டு முலைக்க ஆரம்பிக்கின்றன.

பறவைகளால் சிதறடிக்கப்பட்ட விதைகளின் முலம் ஆஸ்திரேலியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டிலும் 44000 – 200,000 வரையிலான வேப்ப மரங்கள் முலைக்கின்றன என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று பூர்வீக வேப்பம் விதைகள் எமது நாட்டிலும் பறவைகளால் பல இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படலாம்.

நாட்டுப்புரங்களில் வாழும் காகங்கள் புத்திசாலித்தனமான இனமாக கருதப்படுகிறது. இவை பெருமபாலும் இயற்கை நீர் கிடைக்கும் இடங்களுக்கு அருகில் வாழ்கின்றன. இவை வேப்பம் விதைகளை வேகமாக பரம்பலடையச் செய்யும் தன்மையை கொண்டவை. இனப்பெருக்கம் மற்றும் தங்குமிடத்திற்காக இவை வேப்பம் மரத்தை மிகவும் விரும்புகின்றன. வேப்பங்காய்கள் நன்றாக கனிந்ததும் அவற்றை உண்ணுகின்றன. வேப்பம் விதை சதைப்பற்றுள்ள கூழால் முடப்பட்டதாக இருக்கும். விதைகளை சாப்பிட்ட பிறகு செரிமான அமைப்பு வழியாக பறவை விடும் சொட்டுகள் விதைகளை பரப்புகின்றன. சொட்டுகள் விடப்படும் இடமெல்லாம் விதைகள் முலைக்கத் தொடங்கிவிடும்.

மருத்துவ குனங்களை கொண்ட வேப்ப மரங்கள் மனித குலத்திற்கு மிகவும் பயனுள்ளதொரு சொத்தாகும். கண் கோளாறுகள், புண்கள், இதய நோய்கள், நீரிழிவு நோய்கள், காய்ச்சல், கல்லீரல் பிரச்சினைகள், கருக்கலைவு வோன்ற நோய்களை குணப்படுத்த வேப்பையும் அதன் தயாரிப்புகளையும் பயன்படுத்த மனிதனுக்கு பாரம்பரிய அறிவும் ஆற்றலும் உள்ளது. இந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்க எதிர்காலத்தில் வேப்ப மரங்களின் தேவை அதிகரிக்கும்.

வேப்பம் இலைகள் கிருமிகளை அழிக்கக்கூடியவை, கிருமிகள் அனுகவிடாமல் காக்கும் சக்தி பெற்றவை. வேப்ப மரத்தின் அடியில் அமர்வதாலும் வேப்பம் காற்றை சுவாசிப்பதாலும் மனதுக்கு தெம்பும் அமைதியும் கிடைக்கும்.

காகங்கள் எமது நாட்டிலும் தாவர சிதறலின் நன்மைக்கு பங்களிக்கும் பாத்திரமாக செயற்படுவது பேருண்மையாகும். அப்படி இருக்கும்போது எமது கரங்களால் வேப்பை அல்லது அதுபோன்ற ஒரு பயனுள்ள மரத்தை நட்டிவிடுவோமேயானால் அதன் விதைகளின் பரம்பல் முலம் பல மரங்கள் இந்த மண்ணில் பல பாகங்களில் முலைக்க நாமும் காரணமாகலாம்.
-----------------------------------
அஸ்ஹர் அன்ஸார் 
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.