2020.06.24 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்
01. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்ட நிதியிடல்
மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தின் முதலாவது பிரிவின் பணிகளை ஆரம்பிப்பதற்காக ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் இந்த திட்டத்தின் ஐஐ பிரிவின் நடவடிக்கைகள் தற்பொழுது இடம்பெற்றுவருகின்றன. இதேபோன்று 100,000 கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தியை மேற்கொள்ளும் திட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதற்கமைவாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் தி;ட்டங்களுக்கான கொடுப்பனவை செலுத்துவதற்காக  50 பில்லியன் ரூபா நிதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும். இதேபோன்ற தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் நீர் விநியோகத் திட்டங்களுக்கு அமைவாக அத்தியாவசிய நிதிப் பொறுப்பைத் தீர்ப்பதற்காக 30 பில்லியன் ரூபா தேவையாக உள்ளது. இதற்கமைவாக இந்த 2 நிறுவனங்களுக்கான நிதி தேவைகளை இலங்கை வங்கி , மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி உள்ளிட்ட உள்ளூர் வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்வதற்காக இந்த நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கும் இதற்கு தேவையான திறைசேரி உத்தரவாதத்தை வழங்குவதற்கும் நிதி , பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. உலக வங்கி அமைப்புக்குட்டபட்ட சர்வதேச அபிவிருத்தி அமைப்பினால் (ஐனுயு) COVUD 19 அவசர தேவைக்காக வழங்குவதற்கு உடன்பட்டுள்ள நிதி ஒத்துழைப்பை  மேலும் அதிகரித்தல்
உலக வங்கி அமைப்புக்குட்பட்ட சர்வதேச அபிவிருத்தி அமைப்பினால் (IDA) நிதி வழங்கப்படும் கீழ்கண்ட திட்டங்களில் இதுவரையில் இணைத்துக்கொள்ளப்படாத 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் COVID 19 இன் காரணமாக அழுத்தத்திற்குள்ளாகியிருக்கும்  சமூக பிரிவை இலக்காக கொண்ட வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்துவதற்கு சர்வதேச அபிவிருத்தி அமைப்பு (IDA) உடன்பாடு தெரிவித்துள்ளது.
  • போக்குவரத்து தொடர்பு மற்றும் சொத்து முகாமைத்துவ திட்டம்.
  • சுற்றாடல் கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவத்தை மேற்கொள்ளும் திட்டம்
  • காலநிலை மாற்றத்திற்கு அமைவான விவசாய நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டம்
இதேபோன்று சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் நிலை மாற்று கடன் வசதியின் கீழ் 05 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் தொற்று அவசர நிதி வசதியின் கீழ் 1.72 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்த நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு 2020 ஜுன் மாதம் 3 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதன் பின்னர் சர்வதேச அபிவிருத்தி அமைப்பின் (IDA) நிலைமாறும்  நிவாரணக் கடனின் கீழ் மேலும் 22.24 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக பெற்றுக்கொள்ளப்படவுள்ள மொத்த நிதியின் தொகையை 87.24 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கும், இந்த நிதியத்தில் COVID 19 திட்டத்தின் காரணமாக சமூகத்தில் மிகவும் அழுத்தத்திற்குள்ளான பிரிவை இலக்காகக் கொண்டு சமூக பாதுகாப்பு நடைமுறைக்காக பயன்படுத்துவதற்கும் நிதி , பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. கொவிட் 19 உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களில் இன்னல்களுக்கு உட்பட்டுள்ள பிரிவு தொடர்பிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரண நடைமுறைகள்
கொவிட் 19 உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களில் இன்னல்களுக்கு உட்படக்கூடிய பிரிவு தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வெளிநாட்டு  உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணத்திற்கான நடைமுறைகள் வெளிநாட்டு உறவுகள்  அமைச்சரினால் அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.
  • 2020 ஜுன் மாதம் 16ஆம் திகதியளவில் 117 நாடுகளிலுள்ள இலங்கையர்களில் 52,401 பேர் மீண்டும் நாட்டிற்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
  • ஜனாதிபதி செயலகம் மற்றும் கொவிட் செயற்பாட்டு செயலணியுடன் இணைந்து இதுவரையில் 38 நாடுகளிலிருந்து 9,580 இற்கு மேற்பட்ட இலங்கையரை இந்நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இதேபோன்று மேலும் 10 நாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக ஜுன் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் 07ஆம் திகதி வரையில் 10 விமான பயணங்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய கிழக்கு மற்றும் ஏனைய இடங்களிலுள்ள இன்னல்களுக்கு உள்ளாகக்கூடிய பிரிவினருக்காக உலர் உணவு பங்கீடு , அடிப்படை மருந்து , பாதுகாப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்காக 42.6 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை இலங்கை தூதுக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • பொருட்கள் தட்டுப்பாடு நிலவுதல் மற்றும் உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்கள் நிலவும் மாலைதீவு, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு உலர் உணவு மற்றும் மருந்து வகைகள் அடங்கிய 15.5 மில்லியன் ரூபா பெறுமதியைக் கொண்ட 5,000 பொதிகளை அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களின் தேவைக்காக அந்த நாடுகளில் இலங்கை குழுவினரால் தேவையான வகையில் இராஜதந்திர பிரதிநிதித்துவம் மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கையர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
  • இலங்கைத் தூதுக் குழு (Sri Lanka Mission) செயல்படாத நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கை இராஜதந்திர தூதுக்குழுவினால் தேவையான சேவைகளை மேற்கொள்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  • இதேபோன்று இந்த உலகளாவிய தொற்றின் காரணமாக இலங்கைக்கு ஏற்படக் கூடிய பொருளாதார அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக இலங்கை இராஜதந்திர தூதுக்குழுவினரால் புதிய வர்த்தக சந்தைகளை அடையாளங் காண்பதற்கும் தற்பொழுதுள்ள வர்த்தக சந்தைகளில் நிலவும் கோரிக்கையை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
04. களனிப் பல்கலைக்கழகத்தில் கணணி மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் கட்டடத்தொகுதி மற்றும் அடிப்படை வசதிகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குதல்
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் 'விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மனிதவள அபிவிருத்தியை மேற்கொள்ளும் திட்டம் ' என்ற திட்டத்தின்  கீழ் களனி பல்கலைக்கழகத்தில் கணணி மற்றும் தொழில்நுட்ப பீடத்தின் கட்டத் தொகுதி மற்றும் அடிப்படை வசதிகளுக்கான  நிர்மாண பணிக்கான  ஒப்பந்தம், அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பெறுகைக்குழுவின் சிபாரிசுக்கமைய 3032.70 மில்லியன் ரூபாவிற்கு வரியற்ற M/s Mega - ICC Joint venture என்ற நிறுவனத்திற்கு வழங்குவதற்காக உயர்கல்வி , தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. நெல் தவிர்ந்த ஏனைய பயிர் உற்பத்திக்கு தேவையான இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு முறையாக விநியோகிப்பதற்கான வேலைத்திட்டங்களை வகுத்தல்
கொவிட் 19 உலகளாவிய தொற்று நிலைமையின் கீழ் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றின் மீது ஏற்பட்டுள்ள மேலாண்மை வரையறுப்பு காரணமாக உணவு பாதுகாப்பிற்கு ஏற்படக் கூடிய  சிரமங்களைத் தவிர்ப்பதற்காக மகாவலி , விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரினால் 'சௌபாக்கியே கெவத்த' மற்றும் 88 ஆயிரம் ஹெக்டர் காணியில் அடையாளங் காணப்பட்ட துறைகளில் 16 பயிர்களை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த நிலைமையின் கீழ் நெல் அல்லாத ஏனைய பயிருக்குத் தேவையான இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு முறையாகவும் தட்டுப்பாடின்றி வழங்குவதற்காகவும் கீழ் கண்ட முறைகளைக்கொண்ட திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தேச வேலைத்திட்டங்கள் மகாவலி , விவசாயம், நீர்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. இந்த விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன..
  • 'சௌபாக்யே கெவத்த' உள்ளிட்ட சிறிய அளவிலான விவசாய உற்பத்திக்கான சேதன பசளை பயன்பாட்டை ஊக்குவிப்பதுடன் தேவைப்படுமாயின் மாத்திரம் 10 கிலோகிராமிற்கு குறைந்தளவில் இரசாயன உரத்தை பகிரங்க சந்தையில் கொள்வனவு செய்வதற்கு வசதி செய்தல்
  • நெல் அல்லாத ஏனைய பயிருக்காக அங்கீகரிக்கப்பட்ட நிவாரண உர பங்கீட்டின் 50 வீதத்தை பகிரங்க சந்தையிலும் எஞ்சிய 50 வீதத்தை விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்கங்கள் ஊடாக வழங்குதல்
  • விவசாய திணைக்களம் , மாகாண விவசாய திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அபிவிருத்தி சபையின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மரக்கறி, பழவகைப் போன்ற உற்பத்திக்கு தேவையான நிவாரண உரத்தை விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களுடாக வழங்குதல்
  • விவசாய அபிவிருத்தி மத்திய நிலையங்களில் தேவையான உரம் கையிருப்பு இல்லாத சந்தர்ப்பத்தில் அல்லது தாமதம் ஏற்படுவதாக காணப்படும் சந்தர்ப்பங்களில் விவசாய ஆய்வு மற்றும் உற்பத்தி உதவியாளரினால் வெளியிடப்படும் பற்றுச்சீட்டின் அடிப்படையிலான பகிரங்க சந்தையில் விவசாயிகளுக்கு உரத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நடைமுறையொன்றை வகுத்தல்
06. கப்பல்களிலிருந்து நுரைச்சோலை (லக்விஜய) அனல் நிலையத்தின் துறைமுக அணைகரை வரையில்  நிலக்கரியை  தரைப்பகுதியில் இறக்குவதற்காக  கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் யுனைடெட் சிப்பர்ஸ் லிமிடெட்டிற்கு இடையிலான போக்குவரத்து ஒப்பந்தத்தை நீடித்தல்
கப்பல்களிலிருந்து நுரைச்சோலை (லக்விஜய) அனல் நிலையத்தின் துறைமுக அணைகரை வரையில்  நிலக்கரியை  தரைப்பகுதியில் இறக்குவதற்காக  கப்பல் கூட்டுத்தாபனம் மற்றும் யுனைடெட் சிப்பர்ஸ் லிமிடெட்டிற்கு இடையிலான போக்குவரத்து ஒப்பந்தத்திற்கான உடன்படிக்கை 2020 ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் உடன்படிக்கையை 2020 / 2021 வருடத்திற்காக மேலும் ஒரு வருட காலத்திற்கு நீடிப்பதற்கு துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்கர் அவர்கள் மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த கூட்டுப்பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07. கொவிட் 19 க்கு பின்னரான  பொருளாதார மறுமலர்ச்சிக்கான வரி நிவாரண நடைமுறைகள்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களினால் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அன்று சமர்ப்பிக்கப்பட்ட ' ஆர்த்திக்க புனர்ஜீவன ஆரம்பய' என்ற  பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் அமைச்சரவை குறிப்பிற்கு அமைவான தீர்மானத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்காக எளிய, ஒழுங்கு விதிகளைக்கொண்ட , செயல்திறன்மிக்க வரிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் கொவிட் 19 தொற்று அழுத்தத்தின் காரணமாக நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதுடன் விசேடமாக சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் அவர்களது வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்காக போதுமான சந்தர்ப்பத்தை வழங்கி , அவர்களது வரிச் சுமையில் தளர்வை ஏற்படுத்துவதற்கு வரி நிர்வாக முறையொன்று நடைமுறைப்படுத்துவது அத்தியாவசிய விடயமாகவுள்ளது.
இதற்கமைவாக 2020, ஜுன் மாதம் 03ஆம் திகதி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதிக்குள் அனைத்து வகையிலான வரி தொடர்பிலான தண்டப்பணத்திலிருந்து விடுவிப்பதற்கும் , அவ்வாறான தண்டப்பணத்தை மீண்டும் அறவிடுதல் 2020 ஜுலை மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிவாரணத்திற்கு மேலதிகமாக கீழ் கண்ட நிவாரணங்களும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு வழங்குவதற்கும், அதற்கமைவாக சட்ட ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும், சட்ட ஒழுங்கு விதி விதிக்கப்படும் வரையில் இந்த நிவாரணங்களை உனடியாக நடைமுறைப்படுத்தவதற்கும் அமைவாக நிதி , பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • வேண்டுமென்றே வரி செலுத்துவதை தட்டிக்கழிப்பது இடம்பெறவில்லை என்பதில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் திருப்திகொள்வாராயின் 2018/2019 மதிப்பீட்டு ஆண்டு வரையில் வெளியிடப்பட்டுள்ள மதிப்பீட்டு அடிப்படையில் செலுத்தப்பட வேண்டிய எஞ்சிய வருமான வரியிலிருந்து விடுவித்தல்
  • 2019ஃ2020 மதிப்பீட்டு வருடத்திற்காக வருமான வரி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு வரிகள் செலுத்தப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையினருக்கு மீண்டும் மேலதிக மதிப்பீடுகளை வெளியிடாதிருத்தல்
  • வரி மேன்முறையீட்டு ஆணைக்குழுவிற்கு மேன்முறையீட்டை முன்வைக்கும் பொழுது சமர்ப்பிக்கப்பட வேண்டிய வங்கி பிணை அல்லது மீள செலுத்தப்படாத தொகையை செலுத்துவதற்காக வழங்கப்படும் தொகைக்கான கால எல்லையை நீடித்தல்
  • உள்நாட்டு இறைவரி திணைக்களத்துடன் தற்பொழுது உடன்பட்டுள்ள பாக்கிஃ செலுத்தத் தவறியுள்ள வரியை செலுத்துவதற்காக நிவாரண காலத்தை வழங்குதல்
  • வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தடை உத்தரவை நடைமுறைப்படுத்துவதை 2021 ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையில் இடைநிறுத்துதல்
  • 2020 மார்ச் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் ஜுன் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குட்பட்ட வகையில் ஏதேனும் வரியை செலுத்துதல் அல்லது ஃ மற்றும் வரி அறிக்கை வழங்குதல் 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் மேற்கொள்வதற்காக வசதி செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட வரியை செலுத்துதல் / அறிக்கையை ஒப்படைப்பதற்கு உரித்தான தினத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படும்.
08. நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் அந்நிய செலாவணி பண பரிமாற்றலை வரையறுத்தல் மற்றும் வெளிநாட்டு வைப்புக் கணக்கு தொடர்பில் உத்தரவை வெளியிடுவதற்கு அனுமதி வழங்குதல்
இந்த நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறல்களை 03 மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு 2020 ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கமைவாக வெளிநாட்டு செலவாணி சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக 2020 ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வர்த்தமானியின் மூலம் தொடர்புபட்ட  உத்தரவு வெளியிடப்பட்டது.
இதேபோன்று விசேட வைப்பீடு கணக்கு மூலம் நாட்டில் வெளிநாட்டு செலவாணி பணத்தை ஊக்குவிப்பதற்காக தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதற்கென 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இந்த அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய 2017ஆம் ஆண்டு இலக்கம் 12 இன் கீழான வெளிநாட்டு செலவாணி சட்டத்தில் 29ஆம் சரத்தின் கீழ் மற்றும் அந்த சட்டத்தின் 29ஆவது சரத்தின் கீழ் தொடர்புபட்ட விதிமுறைகளுக்கு அமைவாக 2020.04.02 மற்றும் 2020.04.08 வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த உத்தரவுகளுக்கு அமைவாக தொடர்ந்தும் கீழ்கண்ட வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக நிதி , பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் கண்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
  • இந்த நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறலை வரையறுப்பதற்கு அமைவாக உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் காலத்தை 2020 ஜுலை மாதம் 2ஆம் திகதி தொடக்கம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடித்தல்.
  • விசேட வைப்பீட்டு கணக்கின் மூலம் நாட்டிற்குள் அந்நிய செலாவணி பணத்தை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையை முன்னெடுக்கும் பொழுது தற்பொழுது நிலவும் அந்நிய செலாவணி சட்டம், பணத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பணத்தை பயன்படுத்துவதை தடுப்பதுடன் தொடர்புபட்ட சட்டத்திலுள்ள ஒழுங்குவதிகளின் காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு இலக்கம் 12 கீழான வெளிநாட்டு செலவாணி சட்டத்தின் 29ஆவது சரத்தின் கீழ் உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட 2020.04.08 திகதி வர்த்தமானி அறிவிப்பில் திருத்தத்தை மேற்கொண்டு புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிடுதல்.
(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.