அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர்கள் சிலர் இன்றும் ஆஜராகவுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளனர்.

அவன்கார்ட் நிறுவனத்தை தான்தோன்றித்தனமாக கையகப்படுத்தியதால் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நிசங்க சேனாதிபதி முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய ஜனாதிபதி ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக கடந்த 23 ஆம் திகதி முன்னாள் அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

ராஜித்த சேனாரத்ன, அர்ஜுன ரணதுங்க மற்றும் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 17 பேர் இந்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்னர்.

அவர்களுள் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஷ் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் மேலதிக சொலிசிஷ்டர் ஜெனரல் வசந்த நவரட்ண பண்டார ஆகியோரும் அடங்குகின்றனர்.

(கேசரி)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.