உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து 2020 ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்துவது தொடர்பான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இன்று இடம்பெறும். சுகாதார பிரிவிடமிருந்து கிடைக்கும் இறுதி அறிக்கையைத் தொடர்ந்து தேர்தல் தினம் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கை இந்த வார இறுதிப்பகுதியில் கிடைக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் அமைப்பின் பிரகாரம் செயற்பட்டிருப்பதை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு உறுதிப்படுத்துவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி உள்ளிட்ட எட்டு தரப்பினர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமைகள் மீதான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதன் பின்னர் அமைச்சர் தேசிய வானொலிக்கு ,ந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்காக பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருக்கும் அதேவேளை, ஜனாதிபதி அரசியலமைப்பின் பிரகாரம் செயற்பட்டிருப்பதை ,து தெளிவுபடுத்துவதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி எந்த வகையிலும் அரசியல் அமைப்பை மீறவில்லை என்பதை ,ந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்தியிருப்பதாக ,லங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர்.டி.சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களம் 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.