ஒரு மாதம் செய்த நன்மைகளை ஏனைய மாதங்களிலும் உயிரூட்டுவோம்! 
            💫💫💫💫💫

இந்த வருட ரமழானை நன்மைகளால் அலங்கரித்து தக்வாவை உள்ளத்தில் நிறைத்து அழகான முறையில் வழியனுப்பி வைத்தோம்.
இந்த ரமழானை அடையச் செய்து அதில் நோன்புகளை நிறைவாக நோற்று அதிகம் அதிகம் நன்மைகள் செய்ய அருள்புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் - அல்ஹம்துலில்லாஹ்!!

ஒவ்வொரு வருடமும் ரமழான் வருகிறது, நமது உள்ளக் கதவுகளை தட்டுகிறது, நமது பாவங்களை அழிக்கிறது, நன்மையின் பக்கம் வழிகாட்டுகிறது.
இது ஒருமாதத்திற்கு மாத்திரம் உரிய அமல்களல்ல; மாறாக இது ஏனைய மாதங்களிலும் நாம் சிறப்பாக வாழ்வதற்கான அமல்கள்.

எனவே, நம்மை கடந்து சென்ற ரமழான் நம்மில் ஏற்படுத்திய மாற்றம் பெருநாள் கழிந்ததோடு இந்த நாட்களில் முகவரி தெரியாமல் நம்மிடம் இருந்து விடைபெற்றுவிடக்கூடாது.
அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக!

ரமழான் மாதத்தில் எத்தகைய இறையச்சத்துடனும் பயபக்தியுடனும் இருந்தோமோ அதே நிலைப்பாடு நம்மில் தொடர்ந்தும் இருக்கும் வகையில் நமது அமல்களை பேணிக்கொள்ள வேண்டும்; நமது செயற்பாடுகளை சீர் செய்துகொள்ள வேண்டும்; எமது நாவுகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

நம்மை நாம் மாற்றிக் கொள்ளாதவரை அல்லாஹ்வும் நம்மில் மாற்றத்தை ஏற்படுத்த மாட்டான்.
எனவே,
நம்மில் நமது அமல்களில் உறுதியான நிலைப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் அல்லாஹ்வின் அன்பினைப் பெற்றுக்கொள்வோம்!
இன்ஷா அல்லாஹ்!

               ....✍
   Sasna Baanu Nawas

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.