'இலங்கையர்கள் தங்கியுள்ள அனைத்து வெளிநாடுகளிலும் கொரோனா அபாயம் நீங்கும் வரை, இலங்கையில் தேர்தலை நடத்த வேண்டாமென ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளதாக “Srikotha” என்ற முகப்புத்தக பக்கத்தினூடாக பரவும் செய்தி போலியானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Sirikotha என்ற முகப்புத்தக பக்கத்தில் "நாம் UNP" என்ற இலட்சனையுடன் வெளியிடப்படும் பதிவுகள் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன் பேஸ்புக் நிறுவனம்,; அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் நடத்தப்படும் "Facebook Page” க்கு வழங்கும் "Verified" என்னும் உறுதிப்படுத்தலை இந்தப் பக்கத்துக்கு வழங்கவில்லை என்பதும், குறித்த பக்கத்தின் நோக்கம் மற்றும் யாருக்கு சொந்தமானது என்பதை வெளிப்படுத்தும் "About" என்ற பகுதியில் 'சிறிகொத்தாவானது கேலிச் செய்திகளை வழங்கும் நிறுவனம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையும், இந்தப் பக்கம் போலியானது என்பதை உறுதிப்படுத்தும் மேலதிக தரவுகளாகும் 

நன்றி - SLPI

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.