களனி, பெத்தியாகொட வீதியில் உள்ள வீடொன்றில் இன்று (27) காலை ஏற்பட்ட தீயினால் அப்பகுதியில் இருந்த 06 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
மின்சார கோளாறு காரணமாக வீடொன்றில் முதலில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாநாகரசபையில் தீயணைக்கும் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(TamilMirror)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.