அநுராதபுர மாவட்டத்திலுள்ள ராஜாங்கணை பிரதேசத்திலுள்ள ராஜாங்களை 01, 03, 05 ஆகிய பிரதேசங்களில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்தில் இருந்து 14 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

இது தவிர, தங்காலை பிரதேசத்தில் இருந்தும் கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அங்கு 09 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.