(இராஜதுரை ஹஷான்)

வாக்குகளை இலஞ்சமாக பெற்றுக்கொள்ளும் நோக்கில் புகையிரத திணைக்களம் கடந்த மாதம் 15ம் திகதி 22 பெண்களை புகையிரத சேவை பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு நியமிப்பதற்கு பயிற்சி வழங்க இணைத்துக் கொண்டுள்ளது. அரச சேவை நியமனத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இந்நியமனத்தின் போது பின்பற்றப்படவில்லை.

 ஆகவே  தேர்தல் ஆணைக்குழு இவ்விடயம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என பெப்ரல் (நியாயமானதும், சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராட்சி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

 அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2020ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 15 ஆம் திகதி 22 புதிய பெண் பாதுகாப்பு அதிகாரிகளை பயிற்சி அடிப்படையில் நியமிப்பதற்கு புகையிரத திணைக்களம் தீர்மானிதது. இதுவரையில் பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் புகையிரது சேவைகள் பாதுகாப்பு சங்கம் பெப்ரல் அமைப்பில்  முறைப்பாடு அளித்துள்ளது.

  தேர்தல் காலத்தில் புதிதாக  ஆட்சேர்ப்பு தொடர்பான ஒரு உச்சநீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து ஆட்சேர்ப்பு பணிக்கு அரச மற்றும் பொது சேவை ஆணைக்குழுவை  தவறாக வழிநடத்தி இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.