இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த 17 பேருக்கும் மற்றும் கட்டாரில் இருந்து இலங்கை வந்த 5 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2804 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 2121 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போதைய நிலையில் 672 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.