இங்கிலாந்துக்கு எதிரான சவுத்தாம்ப்டன் முதல் டெஸ்டில் மே.தீவுகள் முதல் இன்னிங்சில் 318 ஓட்டங்கள் குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து - மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ஜேசன் ஹோல்டர் (6)இ கேப்ரியல் (4) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது.

பின்னர் மே.தீவுகள் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 57 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. பிராத்வைட், ஷாய் ஹோப் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். மே.தீவுகள் சார்பாக பிராத்வைட் சிறப்பாக விளையாடி 65 ஓட்டங்கள் சேர்த்தார். விக்கெட் காப்பாளர் டவ்ரிச் 61 ஓட்டங்கள் அடித்தார். கடைநிலை வீரர்கள் ஏமாற்றம் அளித்தாலும் மே.தீவுகள் முதல் இன்னிங்சில் 102 ஓவர்ளில் 318 ஓட்டங்கள் குவித்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டும், ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனடிப்படையில் மே.தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 114 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.