இன்றைய 05ம் நாளில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 313 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன்படி மே.தீவுகள் அணிக்கு வெற்றி இலக்காக 200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 


4ம் நாள் முடிவில் இங்கிலாந்து 170 ஓட்டங்கள் முன்னிலையில்

மே.தீவுக்கு எதிரான சவுத்தாம்ப்டன் முதல் டெஸ்டில் சிப்லி, கிராலே ஆகியோர் அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணி 170 ரன்கள் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து - மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று போட்டியின் நான்காம் நாளாகும்.

இந்நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் ரொரி பர்ன்ஸ் 42 ஓட்டமும், சிப்லி அரை சதமும், கிராலே 76 ஓட்டமும், பென் ஸ்டோக்ஸ் 46 ஓட்டமும் எடுத்தனர்.

நான்காம் நாள் இறுதியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 284 ஓட்டங்கள் எடுத்துள்ளது. அந்த அணி மே.தீவுகள் அணியை விட 170 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மே.தீவுகள் சார்பில் கேப்ரியல் 3 விக்கெட்டும், சேஸ், ஜோசப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.