2006 ஆம் ஆண்டில் வடமாகாணத்தில் ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்காக வீடமைப்பு திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்ட போது 124 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ´ராதா´ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது ராதா நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்ட சந்திராகாந்தி பெர்ணான்டோ என்ற பெண்இ குறித்த வழக்கிற்கு அடிப்படையான சில ஆவணங்களின் அசல் ஆவணங்களை தான் காணவில்லை எனவும் அவற்றின் பிரதிகளை மாத்திரமே தான் பொலிஸாருக்கு ஒப்படைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது, சாட்சியாளரான பெண் விசாரணைகளின் போது இருந்த நிலைப்பாட்டை விட அதற்கு பாதகமான வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளதால் அவரை பாரபட்சமற்ற சாட்சியாளராக பெயரிட்டு சாட்சி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரச பிரிதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் அறிவித்திருந்தார்.

அதன்படி, குறித்த சாட்சியாளரிடம் மேலதிக சாட்சி விசாரணைகளை மேற்கொள்ள நீதிபதி அரச பிரதி சொலிசிட்டர் ஜெனராலுக்கு அனுமதி வழங்கினார்.

குறித்த சாட்சி விசாரணையின் பின்னர் நீதிமன்றில் தனது சமர்ப்பணங்களை முன்வைத்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், இந்த பிரதிவாதிகளுக்கு எதிராக தொடர்ந்தும் இந்த வழக்கு பராமரித்துச் செல்லப்படாது எனவும் முறைப்பாட்டின் சாட்சி விசாரணையை நிறைவு செய்வதாகவும் நீதிமன்றில் அறிவித்தார்.

இந்த சாட்சியாளர் தொடர்பில் எதிர்வரும் காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்க எதிர்ப்பார்ப்பதாகவும் அரச பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நீதிமன்றில் அறிவித்தார்.

குறித்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் 4 பேரையும் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.