மான்செஸ்டர் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் பிராத்வைட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500-வது விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்டூவர்ட் பிராட் சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்கன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். மே.தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டார். இதனால் கடும் விமர்சனம் எழும்பியது. இங்கிலாந்து அணியும் தோல்வியடைந்தது.

இன்றைய ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தின் போது மே.தீவுகள் வீரர் கிரேக் பிராத்வைட் 19 ஓட்டங்ககள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

இந்த விக்கெட் மூலம் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். ஏற்கனவே ஜேம்ஸ் அண்டர்சன் 500 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது ஸ்டூவர்ட் பிராட் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஜேம்ஸ் அண்டர்சன் 129 டெஸ்டில் இந்த சாதனையை எட்டிய நிலையில் ஸ்டூவர்ட் பிராட் 140 போட்டியில் எட்டியுள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.