ரஞ்சித் மத்துமபண்டார, ராஜித்த சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க உள்ளிட்ட கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

வடமேல் கடற்படை கட்டளைத்தளபதி ரியர் அத்மிரால் டி.கே.பீ திஸாநாயக்கவினால் குறித்த ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக இவர்களுக்கு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

2008 ஆண்டு 11 இளைஞர்களை கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் பொய்யான சாட்சிகளை தாக்கல் செய்து தனக்கு எதிராக மேல்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்து டி.கே.பீ திஸாநாயக்கவால் குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டின் பிரதிவாதிகளாக கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரிவித்து இவ்வாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

(adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.