(பர்வீன்)


 சிறுபான்மை சமூகத்தின் பிரநிதித்துவம் உணரப்பட்டுள்ளது.
இருந்த போதும்
நாங்கள் சந்திக்க இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் வழமையை போன்ற ஒரு தேர்தலாக இருக்கமாட்டாது. ஏனென்றால் இந்த தேர்தலுக்கு பிறகு இந்த நாட்டினுடைய அரசியலை வித்தியாசமாக செய்யவேண்டும் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள் ஆட்சியாளர்களுடைய நோக்கம் ஜனாதிபதித்தேர்தலில் எங்களுக்கு வாக்களிக்காதவர்களை நாங்கள் அடக்கி ஆளவேண்டும் அவர்களுக்கு ஒரு பாடத்தை புகட்ட வேண்டும்.என்கின்ற இறுமாப்போடு நடக்கிற தேர்தலாகத்தான் இதனை நான் நினைக்கிறேன்  அவர்களின் பேச்சுக்களில் கூட முதிர்ச்சியைக்காண முடியவில்லை, பக்குவமில்லாமல் பேசுகிறார்கள்  என ஸ்ரீீீீலங்கா முஸ்லிிம் காாங்கிரஸின் ததலைவரும் முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தி சாார்பில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் ரவூப் ஹக்கீம் தெெரிவித்தார். கடந்த வாரம் சக வேட்பாளர் வேலுக்குமாாரின் ஆதரவாலர்களோடான சந்திப்பொன்று கண்டிியில் இடம்பெெற்றது. இதன் போதே அவர் இவ்வாாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் ஹக்கீம் கூறியதாவது


சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என்ற ரீதியில் புறக்கணித்தே பேசுகிறார்கள். சுயகௌரவமுள்ள தன்மானமுள்ளவர்கள் அடிமைத்தனமாக இவர்களுக்கு பயந்து தமது வாக்குகளை இவர்களுக்கே அளிப்பார்களா என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. இவர்கள் வாக்கு கேட்கும் விதமே அப்படிதான் இருக்கிறது  அச்சுறுத்தி பலவந்தமாக வாக்குகளை பெற முயற்சி செய்வதாகவே தோன்றுகிறது இருந்த போதும் ஆட்சி அமைக்க சிறுபான்மை சமூகத்தினரினதும் வாக்குகள் அவசியம் என்ற  பிரதமரின் அண்மைய பேச்சு அவரின் முதிர்ந்த அரசியல் ஞானத்தை குறிக்கிறது இருந்தபோதும் அவர் இவ்வாறு பேசுவதனால் மாத்திரம் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது மாறாக சிறுபான்மை சமூகத்தின் உள்ளங்களை கவருகின்ற விதத்தில் அவர்கள் நடந்து கொள்ளவேண்டும். அவரது தரப்பில் இருக்கின்ற சிலரது வாய்களுக்குக்கு கடிவாளம் போடவேண்டும். ஏனென்றால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாவிட்டால் சாதாரண பெரும்பான்மையைக்கூட ஆளும் தரப்பினால் பெறமுடியாமல் போய்விடுமோ என்ற அச்ச நிலை இப்போது தோன்றியுள்ளது.

தேர்தலில் வழமையாக சன்மானங்களை வழங்கி வாக்குகளை கபளீகரம் செய்கின்ற ஒருமுறை கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்தது, அல்லது பாதைகளை அடைத்து மரங்களை வெட்டிப்போட்டு வாக்குச்சாவடிக்கு வாக்காளர்கள் செல்வதை தடுக்கின்ற வியூகங்களை செய்வார்கள். இதன் மூலம் வாக்காளர்களை தடுத்து ஒரு அச்சநிலைக்கு கொண்டு வருவதே நோக்கமாகும் ஒரு காலத்தில் இவைகளை செய்துள்ளார்கள். இந்த தேர்தலில் அவ்வாறான ஒரு நிலை தோன்றாமல் இருக்க வேண்டும். கட்டுமீறிப்போயுள்ள ஆணவத்தின் மத்தியில் சிறுபான்மை சமூகத்தின் பிரதிநிதிகளை பாதுகாத்துக் கொள்ளவேண்டிய கடப்பாடு எமக்கு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் ஆழமாக சிந்தித்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதுகாக்குகின்ற வகையில் நமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். 

சிறுபான்மை சமூகத்தின் தன்மானமும், சுயகௌரவமும் பேணப்படுகின்ற வகையில் ஆணவத்ததோடு செயற்படுகின்றவர்களுக்கு தமது எதிர்ப்பை இந்தத்தேர்தலில் காட்டுவார்கள் என்பது எனது கணிப்பு. இந்த விடயம் ஆளும் தரப்புக்கு தெரிந்திருக்கிறது அதனால்தான் பிரதமர் இவ்வாறு கதைத்துள்ளார். ஏனென்றால் இவ்வளவு காலமும் இல்லாமல் இப்போது சிறுபான்மை சமூகம் தொடர்பில் நல்லவிதமாக கதைத்திருப்பது அறுதிபெரும்பான்மையை பெறுவதில் உள்ள சிக்கல் நிலமையாகக்கூட இருக்கலாம்.அதனால் அவர்கள் கொஞ்சம் இறங்கி வந்துள்ளார்கள். இவ்வாறான பசப்பு வார்த்தைகளை நாங்கள் தாராளமாக  கண்டுள்ளோம். எனவே சிறுபான்மை சமூகம் இந்த தேர்தலை எவ்வாறு பயன்படுத்த போகின்றது என்பது அந்த சமூகங்களுக்கு தெரியும். 

கடந்த ஜனாதிபதித்தேர்தலில் நாங்கள் எடுத்த முடிவு மிகச்சரியானது. இதனை ஜனாதிபதியிடம் நான் தைரியமாக சொன்னேன். தனியாக பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டதாக இறுமாப்புடன் அவர்பேசினார்.அப்போது நான் சொன்னேன் நீங்கள் ஜனாதிபதி ஆகியது தொடர்பில் நாங்கள் சந்தோசப்படுகிறோம். அதேவேளை நாங்களும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த பௌத்தர் ஒருவருக்கே ஆதரவு வழங்கினோம் அதனை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அது எங்களது ஜனநாயக உரிமை ஆனால் நாங்கள் ஆதரித்தவர் ஏன் வெற்றிபெறவில்லை என்பது தொடர்பில் எங்களை நாங்களே சுயவிமர்சனம் செய்து கொள்கிறோம்.அதே போல நீங்களும் சிறுபான்மை சமூகத்தினர் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று உங்களையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவேண்டும். இதன்மூலம் எங்கு பிழை நடந்துள்ளது என்பது தொடர்பில் அறிந்து கொள்ளமுடியும். 

நாங்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் வினயமாக கேட்டுக்கொண்டோம். சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் உங்களை சந்தைப்படுத்த முடியாமல் இருக்கிறது நீங்கள் கொஞ்சம் விலகியிருங்கள் என்றோம். அவர் அதனை ஒத்துக்கொள்ளவில்லை. நாங்கள் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அவரோடு பேசிப்பார்த்தோம் அவர் மசியவில்லை.திரு சம்மந்தன் ஐயாவும் சொன்னார். அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை. கடந்த மூன்று ஜனாதிபதித்தேர்தல்களிலும் அவரால் களமிறங்க முடியவில்லை இரண்டு தேர்தல்களுக்கு இருவரை இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலும் இரண்டாவதாக இறக்குமதி செய்தவர் செய்த வேலைகள் நாம் யாவரும் அறிந்ததே 

நாங்கள் கொண்டுவந்த ஜனாதிபதி ஜனநாயகத்தை மதிக்காமல் பிரதமர் பதவியை தூக்கிக்கொடுத்தார். அந்த 52 நாட்கள் அவர்கள் படுத்திய பாடு பாராளுமன்ற வரலாற்றிலே நடக்காத சம்பவங்கள் நடந்தேறின. பாராளுமன்றத்தை கூட்ட முடியவில்லை. சபாநாயகர் கதிரையில் யார்யாரோ உட்கார்கிறார்கள் .அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாமலே இந்தக்கூத்து பண்ணுகிறார்கள் என்றால் பெரும்பான்மை கொடுத்தால் என்ன பண்ணுவார்கள். இவர்களுக்கு பெரும்பான்மை கிடைப்பதானது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலானதாகும். ஆணவமும், இறுமாப்பும் நிறைந்த அரசியல் பயணம் நீண்ட காலம் நீடிக்காது ஒருவேளை இந்தத்தேர்தலே இதற்க்கு முடிவு கட்டலாம். நாம் சரியாக எமது வாக்குகளை பாவிக்க வேண்டும் அதிலும் குறிப்பாக சிறுபான்மை சமூகம் தமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையை கூட்டிக்கொள்ள வேண்டும்.

தற்போது எமது அணிக்கு தலைவராக துடிப்புள்ள இளம் தலைவராக சஜித் பிரேமதாசாவினை முன்னுக்கு கொண்டு வந்துள்ளோம் அவரின் தலைமையில் ஒரு மாற்று அரசியல் சக்தியாக இந்த ஐக்கிய மக்கள் சக்தி என்ற புதிய அணியினை உருவாக்கி தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுகிறோம். இந்த சின்னத்தை சந்தைப்படுத்துகின்ற வேலையை நாம் செய்யவேண்டும். இதனை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் 
என்னோடு சேர்த்து வேலுகுமாரையும் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லவேண்டும் அடுத்த பாராளுமன்றத்தில் எமது கூட்டணி ஆட்சி அமைக்கின்ற பட்சத்தில் அவர் ஒரு பிரதியமைச்சராக உங்கள் முன்னிலையில் வரக்கூடிய சாத்தியம் உள்ளது.எனவே உங்களது வாக்குகளின் பெறுமதியை உணர்ந்து அதனை சரியான விதத்தில் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிருக்கிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.