புவனேகபாகு கட்டிடம் தொடர்பில் விரிவான விசாரணைக்கு உத்தரவு

www.paewai.com
By -
0

வரலாற்று சிறப்புமிக்க புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை விரிவுப்படுத்துமாறு சட்டமா அதிபர், பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொலிஸ் மற்றும் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து சட்டமா அதிபரினால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)