எதிர்வரும் காலங்களில் அரச சொத்துகள் உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக அதனை நாடாளுமன்றில் முன்வைப்பதனை கட்டாயமாக்கும் வகையில் சட்டமொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
பிரசார கூட்டமொன்றில் உரையாற்றுகையில் இவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,  “ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமையால், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்க நல்லாட்சி அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. 
அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை அதிகாரம் கிடைத்தால் நாட்டில் உள்ள சொத்துகள் எதுவும் எஞ்சியிருக்காது என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.  அரச சொத்து மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஒப்பந்தத்ங்களில் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக அதனை நாடாளுமன்றில் சமர்பிக்கும் வகையிலான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நான் உறுதியான நம்பியுள்ளேன். 
எனினும், நாட்டில் எஞ்சியுள்ள வளங்னை இணைத்து நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டிய நிலையே இன்று எமக்குள்ளது” என்றார்.

(தமிழ் மிரர்)
Blogger இயக்குவது.