பொதுத் தேர்தலுக்கான பிரசார கூட்டங்களை நடாத்துவது எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவுடன் நிறைவுக்கு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்குப் பின்னர், பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், வீடுகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை வரை மேற்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் நான்காம் திகதி வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் சந்தர்ப்பத்தில்,  எந்தவிதமான பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் தொடர்பான சட்டவிரோத செயற்பாடுகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதற்கு முன்னர், குறிப்பிட்ட தரப்பிற்கு அறிவிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.