பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களான அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் இருவரும், ராஜாங்கன பகுதியில் இனங்காணப்பட்ட முதலாவது கொரோனா நோயாளி கலந்துகொண்ட மரணச் சடங்கு ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளனர்.

இதனால், இவர்கள் இருவரையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன மற்றும் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் அந்த ஆலோசனைகளை புறக்கணித்து தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில், அனுராதபுரம் மாவட்டத்தில் குறித்த இருவரும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.