முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஆஜராகுமாறு அறிவித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சருக்கு குறித்த திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் இரண்டு சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த இரு சந்தர்ப்பங்களிலும் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவில்லை.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதன் பின்னரே அவருக்கு எதிராக அழைப்பானை வெளியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.