சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே, நாட்டில் மக்களை நேசிக்கக்கூடிய ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்த முடியுமென முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் ​தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ஆட்சி, சுயாதீன ஆணைக் குழுக்களின் செயற்பாடுகள் ஆகியவற்றை முற்றாக ஒழித்துக்கட்டி சர்வாதிகார கொடுங்கோள் நிலை கொண்ட இராணுவ ஆட்சியை நோக்கி தற்போதைய அரசின் செயல்பாடுகள் காணப்படுவதாகவும் இது ஆபத்து நிறைந்ததெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
களுத்துறை மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“தற்போதைய அரசாங்கத்தின் இந்த செயாற்பாடுகள் தொடர நாட்டு மக்கள் ஒரு போதும் நடைபெறவுள்ள தேர்தலில் அவர்களுக்கு ஆணை வழங்கக்கூடாது. 
பொதுஜன பெரமுன மீண்டும் ஆட்சியமைக்கும் பட்சத்தில் ஏகாதிபத்திய அரசாங்கமே அமையும். இது மிகவும் ஆபத்தானது. மக்கள் இதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது. சுயாதீன ஆனைக்குழுக்களின் செயற்பாடுகளை ஒழித்துக்கட்டுவதே இவர்களின் நோக்கமாகும். இதற்காகவே மூன்றில் இரண்டு பலத்தைக் கேட்டு மக்கள் காலடியில் விழுந்து கெஞ்சுகின்றனர்.
சஜித் பிரேமதாஸ ஒரு போதும் ஜனநாயகத்தை மீறி செயற்பட மாட்டார். ஜனநாயகத்தைப் பாதுகாத்து நாட்டை கட்டியெழுப்புவதே அவரின் இலக்காகும். எனவே நாட்டின் ஆட்சியை அவரிடம் ஒப்படையுங்கள். நாடு இன்று பேரழிவுக்குள் சிக்கியுள்ளது.
இதிலிருந்து நாட்டைக்காப்பாற்ற வேண்டும். உலக நாடுகாளின் பூரண பங்களிப்புடன் நாட்டைக் காடியெழுப்பக்கூடிய அனைத்து சக்தியும் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு உண்டு. ஆகவே நாட்டு மக்கள் எமக்கு தெளிவான ஆணையைப்பெற்றுத்தர வேண்டும்.” எனவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.