அயர்லாந்து தொடருக்கான பயிற்சி முகாமுக்கான 24 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன் 30 பேர் கொண்ட பயிற்சி அணியை இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்தது.

அதில் இருந்து அதிகாரப்பூர்வ அணியை அறிவிக்கப்படும். அயர்லாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து விளையாட இருக்கிறது. முதல் போட்டி ஜூலை 30-ம் திகதியும், 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ம் திகதியும், 3-வது போட்டி ஆகஸ்ட் 4-ம் திகதியும் நடக்கிறது.

இதற்கான 24 பேர் கொண்ட பயிற்சி அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. மே.தீவுகள் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இடம் கிடைக்காத பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முந்தைய நாள்தான் அயர்லாந்து தொடர் தொடங்குகிறது. இதனால் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் அயர்லாந்து தொடரில் இடம்பெற மாட்டார்கள். என்றாலும் வலுவான ஒருநாள் அணி விளையாடும் என்று இங்கிலாந்து தேர்வுக்குழு தலைவர் எட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.