உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட், தனது மகளுக்கு வித்தியாசமான பெயர் வைத்தது குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

உசைன் போல்டின் நெருங்கி பெண் தோழி பென்னட்டுக்கு கடந்த மே மாதம் 17-ம் திகதி பெண் குழந்தை பிறந்தது. இந்த தகவல் அறிந்து அந்நாட்டு பிரதமர் டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல் முறையாக உசைன் போல்ட் வெளியிட்டுள்ளார். 

அவரது குழந்தைக்கு வித்தியாசமான முறையில் பெயரிடப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு 'ஒலிம்பியா லைட்னிங் போல்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பெண் தோழியின் 21-வது பிறந்த நாள் அன்று பெயரை வெளியிட்டுள்ள உசைன் போல்ட், ''என்னுடைய பெண் தோழி காசி பென்னெட்டுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூற விரும்புகிறேன். சிறந்த நாளை அவருடன் செலவிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களுடைய மகள் ஒலிம்பியா லைட்னிங் போல்ட் உடன் புதிய வாழ்க்கை தொடங்கியுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.