வில்பத்து – கல்லாறு, மரிச்சுக்கட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் சட்டவிரோதமாக காடழிப்பு செய்து மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத குடியேற்றங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை வௌியிடுமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஜனக்க டி சில்வா, நிஷ்சங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் குழாமினால் அறிவிக்கப்படவிருந்தது.

இருப்பினும், குறித்த நீதிபதிகள் வராத காரணத்தால் மேல்முறையீட்டு நீதிமன்ற மண்டப எண் 204 இல் இன்று விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் ஆகஸ்ட் 26 வரை ஒத்திவைக்கப்படும் என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வில்பத்து வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் தினம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.