ஐ.ஏ. காதிர் கான் )
பாராளுமன்ற வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி என்ற பெயரில்லாத ஒரு பாராளுமன்றம், ஆகஸ்ட் மாதம் நடைபெறும் பொதுத்தேர்தலைத் தொடர்ந்து உருவாகும். உண்மையான நம்பிக்கையுடன் இதனை நான் இவ்விடத்தில் தெளிவாகக் கூறுகின்றேன் எனகண்டி மாவட்ட வேட்பாளர் .எல்.எம்பாரிஸ் தெரிவித்தார்.
நாம் இம்முறை கண்டி மாவட்டத்தில் சிங்களதமிழ்முஸ்லிம் மக்களின் அமோக ஆதரவுடன் ஒன்பது அல்லது எட்டு ஆசனங்களையப் பெற்றுக்கொள்வோம் என்பதையும் உறுதியாகத் தெரிவிக்கின்றேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட தேர்தல் பிரசார நிகழ்வுகள், (19) ஞயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை தெல்தோட்டைகண்டிமடவளை பஸார்அக்குறணைகல்ஹின்னகலகெதர ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றனமூத்த அரசியல்வாதிகள்புத்தி ஜீவிகள்மார்க்க அறிஞர்கள்ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வுகளில் அவர் மேலும் உரையாற்றும்போது குறிப்பிட்ட்தாவது,    
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதிக்குப் பின் சக்தி மிக்க அரசை அமைத்து சிங்களம் தமிழ் முஸ்லிம் என்ற பேதம் இல்லாமல், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ என்ற சிரேஷ்ட தலைமைத்துவங்களின் அபிவிருத்திப் பாதையில் இந்நாட்டைக் கட்டியெழுப்புவதே எமது உண்மையான குறிக்கோளாகும்.
எதிர்க்கட்சியினர் தேர்தலுக்குப் பயந்தாலும்நாம் தேர்தலுக்கு அஞ்சவில்லைஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ வெற்றி பெற்றதும் நாம் பொதுத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டோம்நாம் எப்போதும் பொதுமக்களுடன் இணைந்திருக்கும் கட்சியைச் சார்ந்தவர்கள்அதனால்பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்கும் துணிச்சல் எங்களிடம் இருக்கிறது.
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதொரு தலைவராகச் செயற்பட்டார்இதை நாட்டு மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்கொரோனா வைரஸைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததுடன்மக்களின் துன்பங்களை உணர்ந்து தேவையான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதிலும் முன்னின்று செயற்படுகின்றார்.  முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பிரதமரும் இன்று வரை ஆட்சியில் இருந்திரிந்தால்நம் நாடு மயானக்காடாகவே மாறி இருக்கும்ஜனாதிபதி மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் காரணமாகநமது நாடு இன்று முழு உலகுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
பொதுத் தேர்தலுக்குப் பயந்துஎதிர்க் கட்சியினர் ஓடி ஒழிகின்றனர்இது போன்ற எதிர்க் கட்சியினர் உலகில் எந்த நாட்டிலும் இல்லைநாடு அதல பாதாளத்துக்குச் சென்று கொண்டிருந்த வேளையிலேயேஜனாதிபதி கோத்தாபய ராஜபக்க்ஷ இந்த நாட்டைப் பொறுப்பேற்றார்நல்லாட்சியை மக்கள் வெறுத்தே இருந்தனர்இப்படிப்பட்டவர்கள் பொதுத்தேர்தலுக்கு எப்படி முகம் கொடுக்க முடியும்தேர்தல் ஒன்றின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதை இலக்காகக் கொண்டே எதிர்க் கட்சியனர் செயற்படுவர்ஆனால்எமது நாட்டில் அதற்கு நேர் மாற்றமாகவே எதிர்க் கட்சியினர் உள்ளனர்.
அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதை விட்டுவிட்டு சிறிகொத்தவைப் பிடிப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றனர்ரணில் விக்கிரமசிங்க சிறிகொத்தவைத் தரமாட்டேன் என்கிறார்சஜித் பிரேமதாஸ எப்படியாவது அதனைக் கைப்பற்றுவேன் எனக் கூறிவருகின்றார்இந்நிலையில்இவர்களை நாம் எவ்வாறு நம்புவதுஆனால்அரசியலில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது பற்றிய முறைகள் தொடர்பில் அவர்கள் அரசியலில் பழுத்த அனுபவங்களைக் கொண்டஐந்து தசாப்தங்களைத் தாண்டியுள்ள மஹிந்த ராஜபக்க்ஷவிடம் அரசியல் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.