நீங்களும் போதைப்பொருள் வர்த்தகர்கள் குறித்து தகவல் வழங்கலாம்!

www.paewai.com
By -
0

விஷ போதைப்பொருள், குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக மின்னஞ்சல் முகவரி ஒன்றும் மற்றும் தொலைநகல் இலக்கமொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பொதுமக்கள் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1997 மற்றும் 1917 என்ற தொலைப்பேசி இலக்கங்களுக்கு மேலதிகமாக இந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைநகல் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

விஷ போதைப்பொருள் தொடர்பில் 1997@police.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் வழங்க முடியும் எனவும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குழு உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பில் அறிவிப்பதற்காக 1917@police.lk என்ற மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 011 2440 440 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு குறித்த தகவல்களை எழுத்து மூலம் அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)