இனவாத, மதவாதக்காரர்களை வைத்துக்கொண்டு அரசு அரசமைப்பைத் தயாரித்தால் அல்லது திருத்தியமைத்தால் அதனைக் குப்பைக்கூடைக்குள் நாட்டு மக்கள் வீசவேண்டும் என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டு அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை மாற்றியமைக்கப்போவதாக ஆளுந்தரப்பினர் கூறிவரும் நிலையிலேயே மங்கள சமரவீர இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

மதகுருமார்களையும், அடிப்படைவாதிகளையும் இணைத்துக்கொண்டு அரசமைப்பைத் தயாரித்த நாடுகளுக்கு நேர்ந்த கதியை மறந்துவிடக்கூடாது.

அத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் அவற்றைக் குப்பைக்கூடைக்குள் வீசியெறிவதே இலங்கையர்களின் பொறுப்பாகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

(tamilwin.com)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.