மான்செஸ்டர் டெஸ்டில் மே.தீவுகள் அணி நாணயச் சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியில் மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து - மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

மழை நின்று, மைதானம் உலர்ந்ததால் 4.30 மணிக்கு நாணய சுழற்சி இடம்பெற்றது. இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். மே.தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் நாணயச் சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட், ஜாஃப்ரா ஆர்சர் ஆகியோர் நீக்கப்பட்டு, கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.