“முஸ்லிம் உரிமைகளை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் 2013ம் ஆண்டில் சகோ. அப்துர் ராஸிக் அவர்கள் சிங்கள மொழியில் ஆற்றிய ஒரு உரையில் பௌத்த மதத்தை நிந்தனை செய்தார் என்று கூறி பொது பல சேனா அமைப்பினால் பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று (03.07.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் எதிர்வரும் 27.11.2020ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட இன்றைய வழக்கு விசாரணையில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையில் சட்டத்தரணி நுஷ்ரா ஸரூக் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகினர்.

ஊடக பிரிவு,
சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.