மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் மே.தீவுகள் அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுகளையும் இழந்து 197 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

மே.தீவுகள் அணி சார்பில் அணித்தலைவர் ஹோல்டர் மாத்திரமே அதிகபட்சமாக 46 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் இங்கிலாந்து சார்பில் ஸ்டுவட் புரோட் (SCJ Broad) 6 விக்கட்டுகளை கைப்பற்றினார். 

ஏற்கனவே இங்கிலாந்து தமது முதல் இன்னிங்சில் 369 ஓட்டங்கள் குவித்தது.

இங்கிலாந்து - மே.தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று முன்தினம் ஆரம்பமானது. நாணயச் சுழற்சியில் வென்ற மே.தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். 

இங்கிலாந்து சார்பில் டொமினிக் சிப்லி, ரோரி பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிப்லி ஓட்டம் ஏதும் எடுக்காமலும், தலைவர் ஜோ ரூட் 17 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் பென் ஸ்டோக்ஸ் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

மறுபக்கம் விளையாடிய ரோரி பேர்ன்ஸ் அரைசதம் அடித்து 57 ஓட்டத்துடன் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 122 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.

5-வது விக்கெட்டுக்கு ஒல்லி போப் உடன் விக்கட் காப்பாளர் ஜோஸ் பட்லர் ஜேடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒல்லி போப் மற்றும் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தனர்.
 
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 85.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ஓட்டங்கள் எடுத்திருந்தது. ஒல்லி போப் 91 ஓட்டங்களுடனும், ஜோஸ் பட்லர் 56 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஒல்லி போப் 91 ஓட்டத்துடன் வெளியேறி சதத்தை தவறவிட்டார். ஜோஸ் பட்லர் 67 ஓட்டுத்துடன் ஆட்டமிழந்தார். இறுதியில் அதிரடியாக ஆடி அரை சதமடித்த பிராட் 62 ஓட்டத்துடன் வெளியேறினார். 

இறுதியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ஓட்டங்கள் குவித்தது.

மே.தீவுகள் அணி சார்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல், சேஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து, மே.தீவுகள் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சில் சிக்கியது மே.தீவுகள் அணி.

ஆட்டம் தொடங்கியது முதல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மே.தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்தது. ஹோல்டர் 24 ஓட்டத்துடனும்இ டவ்ரிச் 10 ஓட்டத்துடனும் களத்தில் இருந்தனர்.

இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் தலா 2 விக்கெட்டும், ஆர்ச்சர், வோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தற்போது தமது இரண்டாம் இன்னிங்சுக்காக ஆடிவரும் இங்கிலாந்து அணி மூன்றாம் நாளிக் தேநீர் இடைவெளிக்காக போட்டி இடைநிறுத்தப்பட்ட வேளை விக்கட் இழப்பின்றி 86 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.