13 வருட உறுதிப்படுத்தப்பட்ட கல்வி வேலைத் திட்டத்தின் கீழ், உயர்தர தொழில்நுட்ப கற்கை நெறியை தொடர்வதற்காக தரம் 12 மாணவர்களை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்றும் இறுதி தினம் 2020 ஜுலை மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிப்பதற்கு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொழில் கற்கைநெறிகள் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலை பட்டியலையும் கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.  www.mov.gov.lk கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பதாகும்.

மேலதிக தகவல்களுக்காக கல்வி அமைச்சின் தொலைபேசி இலக்கமான 0112 787 136 மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிய முடியும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.