எதிர்காலத்தில் சாரதி அனுமதி பத்திரங்களை இராணுவத்தினர் ஊடாக வழங்குவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து போக்குவரத்து அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் விநியோகிக்கப்படும் சாரதி அனுமதி பத்திரங்களை வழங்கும் நடவடிக்கை தற்போது தனியார் நிறுவனம் ஒன்றினால் முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த 2009 ஆம் ஆண்டு சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொடுக்கும் பணிகள் தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டது. அவ்வாறு சாரதி அனுமதி பத்திரத்தை பெற 1,340 ரூபா என்ற தொகை பணம் செலவிடப்படுகின்றது.

இது தொடர்பான கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுப் பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா, அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.