(செ.தேன்மொழி)

இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு ஏற்படுத்திய அவமானம் தொடர்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் மனோ கணேசன் வலியுறுத்தினார்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஐ.டி.எம். நேசன்ஸ் கெம்பஸ் நிறுவனத்தின் கட்டிடத் தொகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கம் சௌபாக்கியத்துக்கான அரசாங்கம் என்பதை விட குழப்பகரமான அரசாங்கமாக மாறியுள்ளது.

ஆரம்பத்தில் எம்.சீ.சீ. ஒப்பந்தம் தொடர்பான குழப்பம், கருணா அம்மான் குழப்பம், நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள கிரிக்கட் வீரர்களை அவமானப்படுத்திய குழப்பம் என்று குழப்பகரமான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது.

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்ககாரவும், மஹேல ஜயவர்தனவும் எமது கட்சி உறுப்பினர்கள் கிடையாது, அவர்கள் எமது தேசத்திற்கான அபிமானத்தை ஏற்படுத்தி கொடுத்தவர்கள்.

பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூளை எரிந்தும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை தாக்கியும் அரசியல்வாதிகள் நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்திய போது. இந்த கிரிக்கட் வீரர்களே எமது நாட்டுக்கு அபிமானத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள்.

நாங்கள் எதிர்பார்க்கும் தேசிய ஐக்கியத்தையும் இந்த விளையாட்டு வீரர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். இவர்களை அவமானப்படுத்தும் அளவுக்கு கீழ்தரமான செயற்பாடுகளில் அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆளுத்தரப்பினரின் இந்த கீழ்த்தரமான செயற்பாட்டை மறைக்க முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கிரிக்கட் வீரர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.

ஆளும் தப்பு உறுப்பினரான முன்னால் விளையாட்டுத்துறை அமைச்சரினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும்.

இந்நிலையில் கிரிக்கட் வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவைக் கொண்டு டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருவதால் மறைக்க முடியாது.

அதனால் நாமல் அவர்களே இந்த விவகாரம் தொடர்பில் நீங்கள் டுவிட்டரில் கருத்து தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.