இன்று காலை ஐ.டீ.எச். வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கோரானா என சந்தேகிக்கபடுகின்ற நபர் கொழும்பு பெரிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்து சரணடைந்துள்ளார். 

இன்று காலை போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு தப்பியோடிய நபரே கொழும்பு பெரிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற குறித்த நபர் கோட்டை, பிரதான வீதியில் இருந்து முச்சக்கர வண்டி ஒன்றின் மூலமே கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த நபர் பயணித்த முச்சக்கர வண்டி சாரதி கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.