மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விளையாடும் 13பேர் கொண்ட இங்கிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பு மிக்க இந்த அணியில், சுழற்பந்து வீச்சாளர் டொம் பெஸ் இணைந்துக் கொள்ளப்பட்டுள்ளார். அதேவேளை ஜெக் லீச் மற்றும் மொயின் அலி ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை.

டெஸ்ட் அணியின் தலைவரான ஜோ ரூட் தனிப்பட்ட காரணங்களுக்காக, முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் அணியை வழிநடத்தவுள்ளார்.

ஸ்டோக்ஸ் இங்கிலாந்தின் 81ஆவது டெஸ்ட் அணித்தலைவர் மற்றும் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப் பொறுப்பேற்றதற்கு பிறகு அணித்தலைமையேற்கும் முதல் சகலதுறை வீரர் ஆவார்.

சரி தற்போது 13பேர் கொண்ட அணியின் விபரத்தை பார்க்கலாம்,

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணியில், ஜேம்ஸ் எண்டர்சன், ஜொப்ரா ஆர்செர், டோமினிக் பெஸ், ஸ்டுவர்ட் பிரோட், ரொறி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஸெக் கிரவ்லி, ஜோ டென்லீ, ஒல்லி போப், டொம் சிப்ளி, கிறிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

9 பேர் கொண்ட இருப்பு வீரர்களின் பட்டியலில், ஜேம்ஸ் பிரேஸி, சேம் கர்ரன், பென் போக்ஸ், டென் லோவ்ரன்ஸ், ஜெக் லீச், சகிப் மொஹமத், கிரைஜ் ஓவர்டொன், ஒல்லி ரொபின்சன், ஒல்லி ஸ்டோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 08ஆம் திகதி சௌத்தம்ப்டன் நகரில் உள்ள ரோஸ் போல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.