கடந்த ஒரு சில தினங்களில் கொவிட்தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த வரும் தினங்கள் அரசாங்கத்தினால் விடுமுறை தினங்களாக பிரகனப்படுத்தப்படும் என்று பரவுகின்ற செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வதந்திகள் மற்றும் சமூக ஊடக பிரச்சாரங்களால் கண்டு ஏமாற வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக்கொள்வதாகவும், உத்தியோகபூர்வ தகவல்கள் அனைத்தும் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் மாத்திரமே வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். பொறுப்புவாய்ந்த ஊடகங்கள் வழங்கும் தகவல்களை மட்டுமே நம்புமாறும் பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.