சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை தமக்கு கிடைத்த முறைப்பாடுகளில் இத்தகைய முறைப்பாடுகளே அதிகமென PAFFREL அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

தேர்தலுடன் தொடர்புடைய 1950-க்கும் அதிக முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தேர்தலுடன் தொடர்புடைய 685-க்கும் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் முறைகேடு கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் பிரசாரங்களுடன் தொடர்புடைய 1460 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.