(மினுவாங்கொடை நிருபர்)

இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதம் நடத்துமாறு சில மாணவிகள் முன்வைத்த கோரிக்கையை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வர தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். 

ஆதம் பாரிஸ் அவர்களால் உடுநுவர தவுலகல அலப்பலாவிய விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் (11) சனிக்கிழமை, உடுநுவர பிரதேசத்தில் நடைபெற்ற பொது மக்கள் சந்திப்பின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட குழுத் தலைவர் மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் இம்மாவட்டத்தில் போட்டியிடும் ஏ.எல்.எம். பாரிஸ் ஆகியோருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.