ஆகஸ்ட் 5ஆம் திகதிக்கு முன்னர் எம்.சி.சி.  ஒப்பந்தம் குறித்த தமது நிலைப்பாட்டை அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த  வேண்டுமென ஜே.வி.பி. வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜே.வி.பியின்  தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்  போதே கட்சியின் பிரசார செயலாளரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான விஜித  ஹேரத் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கடந்த  ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல்  பிரசாரமாக எம்.சி.சி. ஒப்பந்தமே அமைந்திருந்தது. ஆட்சி அதிகாரத்தை  கைப்பற்றிய 24 மணித்தியாலத்துக்குள் எம்.சி.சி ஒப்பந்தம் குப்பைதொட்டிக்குள்  கிழித்தெறிப்படும் எனவும் கூறினர்.

ஆனால், புதிய அரசாங்கம்  அமையப்பெற்றதும் இந்த ஒப்பந்தத்தை பரிசீலிக்க குழுவொன்றை அமைத்திருந்தது. 

குறித்த குழு அறிக்கையை சமர்ப்பிக்க தாமதமான போதும் அறிக்கையை வெளியிட  வேண்டிய சூழ்நிலை எழுந்தது.

ஜுலை முதலாம் திகதி இந்த அறிக்கை அமைச்சரவைக்கு  சமர்ப்பிக்கப்பட்டு இரண்டு வாரக்காலப்பகுதிக்குள் தமது மதிப்பீடுகளை  சமர்ப்பிக்குமாறு அமைச்சர்களுக்கு கூறப்பட்டது. தற்போது 22ஆம் திகதிவரை  அதனையும் நீடித்துள்ளனர். இவ்வாறு காலதாமதத்தை ஏற்படுத்துவது தேர்தலின்  பின்னர் ஒப்பந்தத்தை கைச்சாத்திடவேயாகும் என்றார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.