அசிரத்தையால் ஏற்படும் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நேற்று (22) பெற்றோலிய அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தினமும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அசிரத்தையாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளின் அனுமதிப்பத்திரங்களுக்கு பூச்சியத்திலிருந்து 24 வரை புள்ளிகளை வழங்கும் நடைமுறை ஆரம்பிக்கப்படும் என, அவர் தெரிவித்தார்.

இந்நடைமுறையின் கீழ், சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான புள்ளிகள் 24 இலிருந்து மதிப்பீடு செய்யப்படுவதோடு, விபத்துகள் ஏற்படும் பட்சத்தில் குறித்த புள்ளிகள் குறைக்கப்படும்.  

இம்முறையின் கீழ், புள்ளிகள் குறையும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படும் எனவும், அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.