ரஷ்யா, கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் செச்செனோவ் Chechinov First Moscow medical university பல்கலைக் கழகம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பானது எனவும், மருத்துவ பரிசோதனைகள் ஜூலை இறுதிக்குள் முடிக்கப்படும் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வில் 18 பேர் பங்கேற்றனர் மற்றும் கடுமையான பாதகமான நிகழ்வுகள், சுகாதார புகார்கள், சிக்கல்கள் அல்லது பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக இவர்கள் மீண்டனர் என்று இது குறித்து ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிசோதனைகளின் முடிவுகள் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நல்ல சகிப்புத்தன்மை குறித்து நம்பிக்கையை அளித்துள்ளது. தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது, எதிர்ப்பு சக்தி உருவாக்கப்படுகின்றன. அது நம்மை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன என்று ஆராய்ச்சியாளர் ஸ்வெட்லானா வோல்ச்சிகினா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஜூலை இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும்இ பரிசோதனை முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில்இ வரும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள கமாலேயே தொற்று நோய் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் இந்த தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது. தடுப்பு மருந்து தொடர்பான பரிசோதனைகளை செச்சினோவ் பர்ஸ்ட் மாஸ்கோ மெடிக்கல் பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது.

சீனாவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 81 ஆயிரத்து 472 பேர்; இறந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 42 பேர்.
தனி மனித இடைவெளி, மாஸ்க் அணிதல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றன. இந்த இக்கட்டான சூழலில், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியைக் கண்டுபிடித்து, மனிதர்களுக்கு செலுத்தி முதற்கட்டமாக வெற்றி கண்டுள்ளதாக, ரஷ்யாவின் செச்னோவ் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

இதேவேளை இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துதான் முதலில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகிறது

இந்நிலையில், ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட முயற்சிப்பதாக இங்கிலாந்து குற்றச்சாட்டியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து பொதுத்தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து - அமெரிக்கா இடையேயான ரகசிய வியாபார தகவல்களை திருடி இணைய தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிகளை ரஷியா செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது எனவும், நட்பற்ற செயல்பாடுகளை ரஷ்யா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது எனவும், தகுந்த பதிலடி தருவதே வழக்கம் எனவும் ரஷியா மிரட்டியிருப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.