சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக குருணாகலையில் அழிக்கப்பட்ட புவனேகபாகு அரச சபை தொல்பொருள் தளம் தொடர்பான அனைத்து கோப்புக்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேயருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குருணாகலை நீதவான் நீதிமன்றினால் குருணாகலை மேயருக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

அதேபோல், குருணாகலை நகர அபிவிருத்தி குழுவின் கூட்டங்களுடன் தொடர்புடைய அனைத்து கோப்புகள் மற்றும் குழுவின் கூட்ட குறிப்புக்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு வடமேல் மாகாண ஆளுநனருக்கு குருணாகலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

(Adaderana)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.