பாகிஸ்தான் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்ந்த யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்தார் என்று கிரேண்ட் பிளவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றிய ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிரேண்ட் பிளவர் தனது  பயிற்சி அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, யூனிஸ் கானை கையாள்வது மிகவும் கடினமாக இருந்தது. அவுதிரேலிய மண்ணில் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியில் (2016) பங்கேற்றோம். அப்போது மதிய உணவு இடைவேளை, யூனிஸ் கானுக்கு சில துடுப்பாட்ட நுட்பங்களை வழங்க முயன்றேன்.

ஆனால் எனது அறிவுரையை கண்டு கொள்ளாத அவர், திடீரென எனது கழுத்தில் கத்தியை வைக்க, பதறிப் போனேன். அப்போது அருகில் உட்கார்ந்திருந்த மிக்கி ஆர்தர் (தற்போதைய இலங்கை பயிற்றுவிப்பாளர்), இப்பிரச்சினையில் தலையிட்டார்.

அது சற்று வித்தியாசமாக இருந்தாலும், பயிற்சி பணியில் இதுவும் ஒரு பகுதிதான் என எடுத்துக் கொண்டேன். இருப்பினும், இந்த சம்பவம் அந்த தொடரையே எனக்கு நரகமாக மாற்றியது.

இவ்வாறு கிரேண்ட் பிளவர் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.