ஈராக் நாட்டை சேர்ந்த எம்.பி. ஒருவர் வைரஸ் தாக்குதலுக்கு தற்போது உயிரிழந்துள்ளார். ஈராக்கின் பக்யூபா தொகுதி நாடாளுமன்ற பெண் உறுப்பினர் ஹஹிடா கம்பஸ் (46). இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் அந்நாட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஹஹிடா கம்பஸ் இன்று உயிரிழந்தார். ஈராக் நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த முதல் எம்.பி. இவர் ஆவார்.

போரினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஈராக்கில் மருத்துவத்துறையில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் அங்கு தற்போது தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவும் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.