பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ‌ஷா மக்மூத் குரே‌ஷிக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'இன்று (நேற்று) பிற்பகலில் எனக்கு இலேசான காய்ச்சல் இருந்தது. உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். தற்போது எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இறைவன் அருளால் வலிமையாகவும், சக்தியாகவும் உணர்கிறேன். எனது பணிகளை வீட்டில் இருந்தவாறே தொடர்வேன். தயவுசெய்து எனக்காக பிரார்த்தியுங்கள்' என்று குறிப்பிட்டு இருந்தார்.

வெளிவிவகார அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள விவகாரம் பாகிஸ்தான் அரசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.