சவுதி அரேபிய மன்னர் சல்மான், மருத்துவச் சோதனைக்காக ரியாத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு அரசாங்கச் செய்தி நிறுவனம் (20) தெரிவித்துள்ளது.
84 வயதாகும் மன்னருக்குப் பித்தப்பையில் வீக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. 
2012ஆம் ஆண்டு அவர் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொள்ளும் முன்பு, சுமார் இரண்டரை ஆண்டுகள், அவர் பட்டத்து இளவரசராக இருந்தார்.  
50 ஆண்டுக்கும் மேலாக ரியாத் வட்டார ஆளுநராகப் பதவி வகித்தார். மன்னரின் உடல்நிலை பற்றிய மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.