பொது சுகாதார பரிசோதகர்கள் இன்று (24) ஒருநாள் சுகயீன அடையாள விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதுவரை தமது கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய தீர்வு வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அததெரணவிற்கு கருத்து தெரிவித்த பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய, ஒரு சிலரின் அவசியமற்ற தீர்மானங்களே இந்த நிலைமைக்கு காரணம் என கூறினார்.

ஆகவே, பொது சுகாதார பரிசோதகர்களின் உண்மையான பிரச்சினைகளை கண்டறிந்து தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.