ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து நேற்று தப்பிச் சென்ற கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தனது சென்ற பாதை தொடர்பாக அளித்த தகவல்கள் தவறானவை என தெரியவந்துள்ளதாக  பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி ஜாலியா சேனரத்ன தெரிவித்தார்.

ஐ.டி.எச் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று கொண்டிருந்தபோது குறித்த நோயாளி தனது ஆடைகளை அருகில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து அங்கு கழற்றிவிட்டு அங்குள்ள ஒரு ஆடையை அணிந்து, அங்குள்ள சைக்கிளைத் திருடி, கொழும்பு கோட்டைக்கு தப்பிச் சென்றதாக விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது. 

கொரோனா நோயாளி ஐ.டி.எச் மருத்துவமனையிலிருந்து கொழும்பு கோட்டை பகுதிக்கு எவ்வாறு பயணித்திருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் மற்றும் பிற சாட்சிகளைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினர் விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் அந்த நபர் துணிகளையும், சைக்கிளையும் திருடிய வீடு கிருமி நீக்கம் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த நோயாளியின் பொறுப்பற்ற நடவடிக்கைகளுக்கு தனிமைப்படுத்தல் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தின் படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார் .

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.